இப்ராஹிம் ரைசியின் சோகமான மறைவால் அதிர்ச்சியடைந்தேன் – மோடி

24 664af5c82847e

இப்ராஹிம் ரைசியின் சோகமான மறைவால் அதிர்ச்சியடைந்தேன் – மோடி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸியின் இறப்பு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நாடுகளின் தலைவர்களும் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தனது இரங்கலை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், ”ஈரான் ஜனாதிபதி டாக்டர்.செயத் இப்ராஹிம் ரைசியின் சோகமான மறைவு ஆழ்ந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

இந்தியா-ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுக்கூறப்படும் . அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version