24 667f7cfe0ff26 23
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள ஈரான் ஜனாதிபதி தேர்தல்!

Share

மத்திய கிழக்கின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள ஈரான் ஜனாதிபதி தேர்தல்!

மத்திய கிழக்கின் முக்கிய ஏற்றுமதி வர்த்தக நாடான ஈரானில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கடும்போக்காளர் சயீத் ஜலீலிக்கும் மிதவாத வேட்பாளர் மசூத் பெசெஷ்கியனிற்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எட்டு மில்லியனிற்கு மேற்பட்ட வாக்குகள் தற்போது வரை எண்ணப்பட்டுள்ளதாகவும் குறித்த இருவரும் 40 வீத வாக்குகளை தன்வசப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு வாக்காளர்களும் 50 வீத வாக்குகளை பெறவிட்டால் வெள்ளிக்கிழமை இரண்டாம் சுற்று தேர்தல் இடம்பெறும் என கூறப்படுகிறது.

கடந்த மே 19ம் திகதி ஈரானின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து ஈரானில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அந்நாட்டு நீதித் துறை தலைவர் இப்ராஹிம் ரய்லி உட்பட ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தற்போதைய ஜனாதிபதி ஹசன் ரூஹானிக்கு நெருக்கமானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இப்ராஹிம் ரய்லி உள்பட அந்நாட்டின் அணுசக்தி துறையின் முன்னாள் ஆலோசகர் சயீத் ஜலீல், முன்னாள் தளபதி மோசின் ரேசாய், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ரசா ஜகானி, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் ஹுசைன் காஜிஸ்தி, அந்நாட்டு மத்திய வங்கியின் தலைவர் அப்துல் நசீர் ஹிம்மதி, மிதவாத வேட்பாளர் மசூத் பெசெஷ்கியனி ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

1998ஆம் ஆண்டு அதிகமானவர்களுக்கு மரண தண்டனை விதித்த சட்டத் துறைத் தலைவர் இப்ராஹிம் ரய்லிக்கு இந்தத் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட போதும் சயீத் ஜலீலிக்கும், மசூத் பெசெஷ்கியவுக்கும் இடையிலேயே போட்டி அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மொத்தம் 590 பேர் பதிவு செய்திருந்ததாகவும், அதில் 7 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....