ரஷ்யாவில் நேற்று(27.12.2023) சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
அந்த நாட்டின் இா்கட்ஸ்க் பிராந்தியம், கிரென்ஸ்க் நகருக்கு 93 கிலோ மீட்டர் தொலைவில் மதியம் 1.09 மணிக்கு இந்த நிலடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது ரிக்டா் அளவுகோலில் 5.3 ரிக்டா் அலகுகளாகப் பதிவாகியதுடன் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதங்களோ, பொருள் சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.