இஸ்ரேலிய நகரமொன்றின் மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்படி தெற்கு இஸ்ரேலிய நகரமான ஈலாட்டில் ஆளில்லா விமானம் பொதுமக்களின் கட்டிடத்தில் மோதியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதலில் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் காசாவின் மையப்பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் இராணுவ தளம் தம்மால் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் அப்பகுதியில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருவதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.