அமெரிக்காவில் கடும் பனிப்புயல் காரணமாக சாலையில் சென்ற வாகனங்களை, வாகன சாரதிகள் அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு சென்றுள்ளனர்.
இதனால், ஆங்காங்கே நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வர்ஜீனியாவில் வீசிய பனிப்புயலைத் தொடர்ந்து ஐ 95 என்ற நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால் அந்தச் சாலையின் இருமருங்கிலும், ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
கடுமையான பனிப்பொழிவு இருந்தமையால், பெரும்பாலான வாகன சாரதிகள், தங்கள் வாகனங்களை அப்படியே நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர். எஞ்சியவர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களுக்கு உணவும், குடிநீரும் வழங்க மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
#WorldNews
Leave a comment