துருக்கிக்கு இலங்கையிடமிருந்து நன்கொடை

turkey 2

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு இலங்கை தேயிலை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

தேயிலைத் தொகை துருக்கிக்கான தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட தேயிலையே துருக்கி மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தேயிலைச் சபை ஆகியன இந்த நன்கொடைக்கான செயற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version