3 51
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய பிரதமர் மோடி

Share

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன்(Donald Trump), பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் பேசியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருவரும் இருதரப்பு உறவு குறித்து பேசியதாகவும், உலக அமைதிக்காக இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

“எனது அன்பு நண்பர் டொனால்ட் ட்ரம்புடன் பேசியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது பதவி காலத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நமது மக்களின் நலனுக்காகவும், உலகளாவிய அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி அவருடன் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...