உலகையே நடுங்க வைக்கும் ட்ரம்பை வாயை மூடச் சொன்ன நபர்: அவர் யார் தெரியுமா?
உலகையே நடுங்கவைக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பையே ஒருவர் வாயை மூடச் சொன்னதாக சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவிக்கொண்டிருக்கிறது.
அப்படி ட்ரம்பையே வாயை மூடச் சொன்ன அந்த நபர் யார் தெரியுமா? அவர் வேறு யாருமில்லை, ட்ரம்பின் புதிய நண்பரான எலான் மஸ்கின் நான்கு வயது மகன்தான் அந்த தைரியசாலி.
ஆம், ட்ரம்ப் எலான் மஸ்கின் மகனை உயர்ந்த IQ கொண்ட அருமையான நபர் என புகழ்ந்துகொண்டிருக்க, அந்தச் சிறுவனோ அவரை வாயை மூடச் சொன்னதாக சமூக ஊடகங்களில் மக்கள் தெரிவித்துவருகிறார்கள்.
நிகழ்ச்சி ஒன்றில் எலான் மஸ்க் பேசிக்கொண்டிருக்க, ட்ரம்ப் அதை கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அப்போது ட்ரம்பின் அருகே நின்றுகொண்டிருந்த எலான் மஸ்கின் மகன், ட்ரம்பைப் பார்த்து, வாயை மூடுங்கள் (I want you to shush your mouth) என்று கூறுவதாக சமூக ஊடகமான எக்ஸில் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், அந்தப் பையன் ட்ரம்பைப் பார்த்து கெட்டவார்த்தை ஒன்றைக் கூறியதாகவும், நீங்கள் உண்மையான ஜனாதிபதி அல்ல, நீங்கள் இங்கிருந்து போய்விடுங்கள் என்று கூறியதாகவும் இணையவாசிகள் கூறுகிறார்கள்.
அந்தப் பையன் சொன்னது பிடிக்காமல், முகத்தைச் சுழித்த ட்ரம்ப், முகத்தை திருப்பிக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.