உலகம் முழுவதும் ஆதிக்கம்! – சட்டவிரோத காவல் நிலையங்களை திறந்தது சீனா

Flag of the Peoples Republic of China.svg 1

உலக வல்லரசாக உருவெடுக்கும் முயற்சியாக, கனடா, அயர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகள் உட்பட உலகெங்கிலும் ஏராளமான சட்டவிரோத காவல் நிலையங்களை சீனா திறந்துள்ளது.

இது மனித உரிமை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் ஊடக தகவல்களை மேற்கோள் காட்டி, புலனாய்வு இதழான ரிபோர்டிகா செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், கனடா முழுவதும் பொது பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து முறையற்ற காவல் சேவை நிலையங்களை சீனா திறந்திருப்பதாகவும், இதில் 3 போலீஸ் நிலையங்கள் கிரேட்டர் டொரோன்டோவில் மட்டும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த சட்டவிரோத காவல் நிலையங்கள் மூலம் பல்வேறு நாடுகளில் நடக்கும் தேர்தலிலும் சீனா தனது ஆதிக்கத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்துவதாக ரிபோட்டிகா செய்தி கூறுகிறது. இதுவரை சீனா 21 நாடுகளில் 30 சட்டவிரோத காவல் நிலையங்களை அமைத்திருப்பதாக சீனாவின் பஸ்ஹோ நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக உக்ரைன், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இதுபோன்ற சீன காவல் நிலையங்கள் சட்டவிரோதமாக செயல்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நாடுகளின் தலைவர்கள் சீனாவின் செயல்பாடுகள் குறித்தும், அந்நாட்டில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் கேள்வி எழுப்பி வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#world

Exit mobile version