தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சி வியட்நாமில் உள்ள உணவகம் ஒன்றில் விற்பனை செய்யப்படுகிறது. வியட்நாமில் இதன் விலை நபர் ஒருவருக்கு, இந்திய மதிப்பில் 3,300 ரூபாய் என கூறப்படுகிறது.
தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சியை அப்படியே அடுப்பில் வைத்து சமைப்பதையும் அதேபோல, வாடிக்கையாளர்கள் நேரில் பார்ப்பதற்கும், வீடியோக்களை எடுப்பதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
சமீபத்தில் வியட்நாம் அமைச்சர் டோ லாம், லண்டனில் இத்தகைய இறைச்சியை உண்ட வீடியோ வைரலானது.
இதனைத்தொடர்ந்து, அதனையே சொந்த நாட்டில் செயற்படுத்தியதாக உணவகத்தின் உரிமையாளர் என்குயன் ஹூ டங் குறிப்பிட்டுள்ளார்.
தங்க இறைச்சின் விலை மட்டுமல்ல, சுவையும் நன்றாக உள்ளது என பலர் கருத்துக் கூறி வருகின்றனர்.
வியட்நாம்- ஹனோய் நகரில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தான் குறித்த உணவகம் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#WorldNews