பிரித்தானியாவில் ராட்சத கடல் வாழ் உயிரினத்தின் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ராட்சத கடல்வாழ் உயிரினமானது, சுமார் 18 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மத்திய பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட Ichthyosaurus என அழைக்கப்படும் இந்த உயிரினத்தை கடல் டிராகன் என்றும் அழைக்கப்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ராட்சத கடல் வாழ் உயிரினமானது சுமார் 33 அடி நீளம் கொண்டது என்றும் அத்துடன், மண்டையோடு மட்டும் ஆறரை அடி நீளமாக இருக்கிறது எனக் கூறப்படும் அதேவேளை தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த உயிரினமானது பிரித்தானிய மண்ணில் கண்டெடுக்கப்பட்ட மிக பழமையான எச்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WorldNews