சுவிட்சர்லாந்தில் தற்கொலை செய்துகொள்வதற்கு இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில், Exit International என்ற நிறுவனமானது, Sarco என்ற அழைக்கப்படும் இயந்திரமான 3D Printed Capsule என்ற தற்கொலை இயந்திரத்தை வடிவமைத்துள்ளது.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசானது சட்டப்பூர்வமான அனுமதியை வழங்கியுள்ளது.
அத்துடன் இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமாக இருந்தாலும் செல்ல முடியும் எனவும், மேலும் உயிரிழக்க நினைப்பவர்கள் இந்த இயந்திரத்தில் ஏறி வசதியாக படுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டு, அவர்கள் பதிலளித்தவுடன், ஒரு பொத்தானை அமுக்க வேண்டும்.
பின்னர், அந்த இயந்திரத்தில் நைட்ரஜன் நிரப்பபட்டு, ஒக்ஸிஜன் அளவு 21 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக மாறி 30 வினாடிகளில் உயிரிழந்துவிடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா, ஒக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஒக்சைடு பற்றாக்குறை மூலம் உயிரிழப்பு ஏற்படுகிறது.
Leave a comment