மட்டக்களப்பில் 88 வீதமானோருக்கு டெல்டா!

delta 67898

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா தொற்றின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு 88 சதவீதனமான மக்களுக்கு டெல்டா வைரஸ் தொற்று இருக்கக்கூடிய சாத்தியக்கூறு  உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி வவுணதீவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்துமக்களிடம் பெறப்பட்ட 49 மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 43 பேருக்கு டெல்டா வேரியன் வைரஸும், 4 பேருக்கு அல்பா வைரஸும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த 49 மாதிரிகளில் 2 மாதிரிகளின் அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version