நூற்றுக்கும் மேற்பட்ட ஒலிம்பிக் பதக்கங்களை திருப்பிக் கொடுக்கும் வீரர்கள்: காரணம் என்ன தெரியுமா?
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை விளையாட்டு வீரர்கள் திருப்பிக் கொடுத்து வருகிறார்கள்.
அந்த பதக்கங்கள் எல்லாம் பழுது பட்டவை, குறைபாடுகள் கொண்டவை. அதனால்தான் அவற்றை விளையாட்டு வீரர்கள் திருப்பிக் கொடுத்து வருகிறார்கள்.
விடயம் என்னவென்றால், அவற்றை தயாரித்தது, பிரான்ஸ் நாட்டின் நாணயங்களை தயாரிக்கும் அமைப்பு ஆகும்.
இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, பழுதான பதக்கங்களுக்கு பதிலாக புதிய பதக்கங்கள் சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இன்னும் சில வாரங்களில் பழுதான பதக்கங்களுக்கு பதிலாக புதிய பதக்கங்கள் அளிக்கப்பட இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.