ஆப்கானிஸ்தானில் உணவுப் பஞ்சம் காரணமாக, ஒரு இலட்சம் குழந்தைகளைக் கொல்ல போராளி குழுக்கள் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருப்பதால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஒருவேளை உணவு உண்பதற்கு கூட வழியில்லாத மக்கள், உணவு மற்றும் பணத்திற்காக தங்களிடம் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பல தசாப்தங்களாக பசி மற்றும் பட்டினி நெருக்கடியில் இருந்து வரும் ஆப்கானிஸ்தானில், இப்போது அவை மேலும் அதிகரித்துள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
அத்துடன், குளிர்காலத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை கொலை செய்ய ஆப்கானிஸ்தான் போராளிகள் குழுக்கள் முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.
இதேவேளை இந்த குளிர்காலத்தில் 22.8 மில்லியன் அல்லது அதற்கும் மேற்பட்ட மக்கள் உணவுக்காக போராடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என சர்வதேச உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் 8.7 மில்லியன் மக்கள் பட்டினி மற்றும் உணவுப் பஞ்சத்தில் சிக்குவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
#WorldNews