tamilni 160 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம்

Share

ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம்

ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் சூளுரைத்துள்ளார்.

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே, கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி முதல் போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 15 நிரந்தர உறுப்பினர்கள் உடைய ஐ.நா., பாதுகாப்பு அமைப்பினால் தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யவும், பிணைக்கைதிகள் அனைவரையும் ஹமாஸ் அமைப்பு உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் ஐ.நா. பாதுகாப்பு அமைப்பு தாக்கல் செய்த தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்தது.

இதையடுத்து தீர்மானம் தோல்வியடைந்தது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பதாவது, ஐ.நா. பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் அமெரிக்கா எடுத்த நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.

போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளோம்.

மேலும், ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...