24 65ff7b6abf522
உலகம்செய்திகள்

மொஸ்கோ தாக்குதலின் பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு

Share

மொஸ்கோ தாக்குதலின் பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு

ரஷ்யா – மொஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி மண்டபம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவசரகால சேவை பணியாளர்கள் கட்டிடத்தின் இடிபாடுகளில் தொடர்ந்தும் தேடுதல்களை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

தாக்குதல்தாரிகளின் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பின்னர் மண்டபத்துக்கு தீயிட்டபோதே பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் அரங்கிற்குள் நுழைந்து, பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியதுடன் அரங்கத்துக்கு தீயிட்டுள்ளனர்.

எனினும் அவர்கள் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் நாட்டின் எல்லைக்கு அருகில் ரஷ்ய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, தாக்குதல் நடத்தியவர்கள் உக்ரைனுக்குள் செல்ல முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தாக்குதல்தாரி ஒருவர் தாக்குதலைச் செய்ய தனக்கு எப்படி பணம் கொடுக்கப்பட்டது என்பதை விவரிக்கும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

”இந்த தாக்குதல்களை நடத்துவதற்காக தமக்கு 500,000 ரூபிள் தருவதாக உறுதியளிக்கப்பட்டது.

இதில் பாதி தொகை தமது வங்கி செலவு அட்டைக்கு மாற்றப்பட்டது.” என அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...