ஹொங்கொங்கில் உள்ள உயரமான வீடமைப்பு வளாகம் ஒன்றில் இன்று (நவம்பர் 26) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பயங்கர தீ விபத்து, நகரத்தின் டாய் போ (Tai Po) மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின், நிர்மாணிக்கப்பட்டுவரும் மாடிக் கட்டிடத்தில் முதலில் ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்து ஏனைய கட்டிடங்களுக்கும் தீ உடனடியாகப் பரவியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், நகரின் தீயணைப்புப் படையின் 100 வாகனங்களும் 700க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.உயிரிழந்தவர்களில் ஒரு தீயணைப்பு வீரரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.