download 2 1 22
உலகம்செய்திகள்

நாக்கு வெட்டப்பட்ட பசு மாடுகள் !

Share

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் பசு மாடுகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது விசாரணை அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்து இதே நிலையில் 6 பசு மாடுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட பசு மாடுகளின் முகம் சிதைக்கப்பட்டுள்ளதாகவே அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், முகம் சிதைக்கப்பட்ட பசு மாடுகளில் ரத்தக்கறை எதுவும் காணப்படவில்லை என்றும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். மேடிசன் கவுண்டி பகுதியில் 6 வயதான பசு மாடு ஒன்று இவ்வாறு முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்தே குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொல்லப்படுவதற்கு முன்னர் தொடர்புடைய பசு மாடு துன்புறுத்தப்பட்டதற்கான அடையாளங்களும் இல்லை என்றே பொலிசார் கூறுகின்றனர். மட்டுமின்றி, பசு மாட்டின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் வண்டியின் தடங்கள் அல்லது கால் தடங்கள் எதுவும் சிக்கவில்லை எனவும், அப்பகுதியில் புற்கள் கூட சேதப்படுத்தப்படவில்லை என்றே கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், காட்டு விலங்குகள் எதுவும் அந்த பசு மாட்டை தொட்டுப்பார்க்கவும் இல்லை என கூறுகின்றனர். இதன் பின்னரே, மேலும் 5 பசு மாடுகள் இதேப் போன்று நாக்கு வெட்டப்பட்டு அல்லது முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த 6 பசு மாடுகளும் எவ்வாறு மரணமடைந்தது என்பது மர்மமாகவே உள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...