ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தயங்கும் நாடுகள்

13 8

ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தயங்கும் நாடுகள்

ஜேர்மன் இரட்டைக் குடியுரிமை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ள போதிலும் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜேர்மன் (German) குடியுரிமையை பெற தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரட்டைக் குடியுரிமை பெறுவதன் மூலம் வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பித்தாலும், அவர்கள் தங்கள் சொந்த நாட்டின் குடியுரிமையையும் வைத்திருக்கலாம்.

இவ்வாறான ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் சில நாட்டு மக்கள் ஜேர்மன் குடியுரிமையை பெறுவதற்கு முன்வர தயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் குறிப்பாக, ஆஸ்திரியா (Austria) மற்றும் இந்தியா (India) ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஜேர்மன் குடியுரிமை பெறத் தயங்குகிறார்கள்.

இந்நிலையில், இந்திய மக்களுக்கு இரட்டைக் குடியுரிமை பெறுவதற்கு இந்தியாவில் அனுமதியின்மையும் இதற்கு காரணமாகும்.

மேலும், வெளிநாடொன்றில் குடியுரிமைளை பெறும் இந்தியர்கள், தங்கள் இந்திய கடவுச்சீட்டை அந்த நாட்டிலேயே உள்ள இந்திய தூதரகத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்பது இந்திய விதிமுறையாகும்.

இதனடிப்படையில், ஜேர்மன் குடியுரிமையை பெற இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

எனவே, ஜேர்மன் குடியுரிமை விதிகள் மாற்றப்பட்டாலும், இந்தியா மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவற்றை பெற முன்வர போவதில்லை என்பது தெரியவருகின்றது.

Exit mobile version