பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்கும் நாடுகள்: முதலிடம் பிடித்துள்ள நாடு எது தெரியுமா!
பணியாளர்களுக்கு சரியான நேரத்துக்கு சம்பளம் கொடுக்கும் நாடுகளை பற்றிய ஆய்வொன்று சமீபத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 68.8 சதவிகித சுவிஸ் நிறுவனங்கள் சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்கின்றன என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வுகளின் மூலம், சுவிட்சர்லாந்து(Switzerland) முதலிடம் பிடித்துள்ளதாக தெரிய வருகின்றது.
ஐரோப்பிய நாடுகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, டென்மார்க்(Denmark) (94.2%), போலந்து (82.7%) மற்றும் நெதர்லாந்து(Netherlands) (76.1%) ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே சரியான நேரத்தில் செலுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்பெயின்(Spain)(46.7%), இத்தாலி(Italy) (41.1%) மற்றும் போர்த்துக்கல்(Portugal) (19.2%) போன்ற ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் சம்பளம் கொடுக்கும் தரவரிசையில் கீழே உள்ளன.
சுவிட்சர்லாந்தில் உள்ள துறைகளை ஒப்பிட்டு நோக்கும்போது, கட்டுமானம் (75.2%) மற்றும் நிதி (73.5%) துறைகளில் உள்ள நிறுவனங்கள் மிகவும் நம்பகமானவை, அதைத் தொடர்ந்து மொத்த விற்பனை (63.3%) மற்றும் சில்லறை விற்பனை (62.9%) ஆகிய துறைகள் தங்கள் பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள், தகவல் தொடர்பு சேவைகள் மற்றும் உள்ளூர் மற்றும் தொலைதூர போக்குவரத்து துறைகளில் சரியான நேரத்தில் சம்பளம் கொடுப்பதில் குறிப்பிடத்தக்க அளவில் மோசமான நிலை காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதுமே, பெரிய நிறுவனங்களை விட சிறிய நிறுவனங்கள் பெரும்பாலும் சரியான நேரத்தில் தங்கள் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- canada
- canada india news
- canada news
- canada tamil
- canada tamil info
- canada tamil news
- canada thamil
- denmark
- europe
- india canada news
- latest tamil news
- Money
- News
- news tamil Netherlands
- news18 tamil
- news18 tamil nadu news
- Switzerland
- tamil latest news
- tamil live news
- tamil nadu latest news
- tamil nadu news
- Tamil news
- tamil news channel
- tamil news live
- Tamil news online
- tamil news today
- today news tamil
- today news tamil thanthitv
- today tamil news
- toronto tamil news
- vancouver tamil