கொரோனாத் தொற்றை பரப்பியவருக்கு 5 ஆண்டுகள் சிறை!
உலகளாவிய ரீதியில் கொரோனாத் தொற்று பரவலடைந்து வருகிறது, இந்த நிலையில் தென் கிழக்காசிய நாடான வியட்நாம் கொவிட் தொற்றால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் வியட்நாமில் கொரோனாத் தொற்று பரவத் தொடங்கியபோது, சிறந்த முறையில் செயற்பட்டு கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்தியிருந்தது, ஆனால் தற்போது வியட்நாமில் மீண்டும் கொரோனாத் தொற்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் வெறும் ஆயிரங்களாக இருந்த கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை தற்போது 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் வியட்நாமில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வியட்நாமின் ஹோ சி மின் நகரில் இருந்து காமவ் நகருக்கு திரும்பிய லீ வான் ட்ரி என்பவர் தன்னை 21 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தாது சுற்றித் திரிந்துள்ளார். குறித்த நபர் மூலமாக 8 பேருக்கு கொரோனாத் தொற்று பரவியது எனவும், தொடர்ந்து தொற்றாளர்கள் தொகை சடுதியாக அதிகரித்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது,
இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்துக்காக இவருக்கு 5 ஆண்டுகள்
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment