coro
உலகம்செய்திகள்

கொரோனா பாதிப்பு! – உலக அளவில் 60 கோடியை கடந்தது

Share

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது.

பல அலைகளாக பரவி வரும் இந்த தொற்று தற்போதும் லட்சக்கணக்கானவர்களை தினமும் பாதித்து வருகிறது.

அதிகபட்சமாக அமெரிக்காவில் 9.41 கோடிபேர் பாதிக்கப்பட்டு, 10.43 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2-ம் இடத்தில் உள்ள இந்தியாவில் 4.43 கோடி பேர் தொற்றால் பாதித்து உள்ளனர். 3.46 கோடி பாதிப்புகளை கொண்ட பிரான்ஸ் 3-ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 கோடியை கடந்துவிட்டது.

நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 60 கோடியே 4 லட்சத்து 49 ஆயிரத்து 934 பேர் கொரோனா தொற்றால் பாதித்து இருப்பதாக அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 64.85 லட்சமாக உயர்ந்துள்ளது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...