கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தென்கொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சமாக இருந்து வருகிறது.
ஆசியா கண்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 7 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இதேபோல் ஐரோப்பாவில் நேற்று 5.47 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக ஜெர்மனியில் நேற்று 1.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, நெதர்லாந்து, ரஷியா ஆகிய நாடுகளில் வைரஸ் தொற்று உயர்ந்தபடி இருக்கிறது.
இங்கிலாந்தில் ஒமைக்ரானால் மீண்டும் கொரோனா பாதிப்பு தற்போது 20 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
#WorldNews
Leave a comment