இந்தியாவில் கொரோனா தீவிரம் – 24 மணிநேரத்தில் 45,352 பேருக்கு தொற்று!!

Vaccination Linecoronaa

இந்தியாவில் கொரோனா தீவிரம் – 24 மணிநேரத்தில் 45,352 பேருக்கு தொற்று!!

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாக கொரோனாத் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா 2-ஆவது அலையின் பாதிப்புகள் குறைவடைந்து வரும் நிலையில், மீண்டும் இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனாத் தொற்றின் பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் இந்த நிலை உருவாகியுள்ளது.

அதன்படி இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 352 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாத் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி ஒரே நாளில் 366 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version