பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 38 ஆயிரத்து 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 178 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனாத் தொற்றால் அதிகளவு பாதிப்பை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்குகின்ற பிரித்தானியாவில், இதுவரையில் மொத்தமாக 68 லட்சத்து 62 ஆயிரத்து 904 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 920 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது வரையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 11 லட்சத்து 96 ஆயிரத்து 757 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 55 லட்சத்து 33 ஆயிரத்து 227 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளனர்.
Leave a comment