செல்போனை பயன்படுத்தி கொரோனாவை கண்டறிவதற்கான முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்சமயம் பிசிஆர் முறையை பயன்படுத்தியே உலகளாவிய ரீதியில் கொரோனா கண்டுபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செல்போன் மூலம் கொரோனா சோதனை நடத்துவதற்கான புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த முறைக்கு ஹார்மோன் பரிசோதனை என பெயரிட்டுள்ளனர்.இதுபற்றி வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிலோட்ஸ் கூறியதாவது,
குறைந்த கட்டணத்தில் எங்கும் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு எளிமையானதாக இந்த சோதனையை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.
குறைந்த கட்டணம், உயர் செயல்திறன் கொண்ட இந்த சோதனையை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உலகெங்கும் அணுகக் கூடியதாக இருக்கும். இந்த சோதனையானது ஆர் என் ஏ மரபணு இருப்பதை கண்டறிய பிசிஆர் போன்ற முறையை பயன்படுத்துகிறது.
ஸ்மார்ட்போன், டிராக்டரை இயக்கவும் முடிவை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு நிலையான வெப்பநிலையில் இந்த சோதனை செய்யப்படுகின்றது.
எனவே இது வெப்பம் மற்றும் குளிர்விக்கும் நேரத்தை நீக்குகின்றது. 20 நிமிடங்களில் முடிவே அளிக்கிறது. என்றார்.
#WorldNews
Leave a comment