tyjugytjgy
உலகம்

கொரோனா தொற்று – சுவிட்சர்லாந்து அரசு தகவல்

Share

உருமாறிய ஒமைக்ரான் வைரசால் கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வர வாய்ப்பு என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வந்து கொண்டிருக்கிறது. அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்ததால் கொரோனா நோய்தொற்று அதிகரித்தபடியே இருக்கிறது.

தற்போது புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து கொரோனா நோய் தொற்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் முழுமையான பலனை அளிக்கவில்லை. இதனால் கொரோனா பெரும் தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி நிலவி வருகிறது. இதற்கிடையே உருமாறிய ஒமைக்ரான் வைரசால் கொரோனா பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியால் கொரோனா தொற்று முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று முடிவு காலத்துக்கு வருகிறது என்று சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அலைன் பெர்செட் கூறியதாவது:-

ஒரு பெருந்தொற்றில் இருந்து அதன் முடிவு கட்டத்துக்கு செல்வதில் நாம் தீர்க்கமானதாக இருக்கக்கூடிய ஒரு திருப்புமுனையில் இருக்கிறோம். மக்களிடம் அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகி இருக்கிறது.

ஒமைக்ரான் வைரஸ் இந்த கொரோனா தொற்று நோயின் முடிவின் தொடக்கமாக இருக்கலாம். ஒமைக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது. குறைவான ஆபத்துக்கொண்டது.

ஆனால் அந்த வைரஸ் எங்களது தடுப்பை உடைப்ப தற்கு எந்த காரணமும் இல்லை. அது எச்சரிக்கையாக மாறுவதற்கான பகுதியையும் கொண்டிருக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சுவிட்சர்லாந்து அரசு கொரோனா தனிமைப்படுத்தும் காலத்தை 10 நாளில் இருந்து 5 நாட்களாக குறைக்க முடிவு செய்துள்ளது.

 

#World

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...

dinamani 2025 11 28 gas8xazv AP25332344411320 750x430 1
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் புயல் வெள்ளப் பலி 631 ஆக உயர்வு: மீட்புப் பணிகள் தொடர்கின்றன!

இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமத்ரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட புயல்கள் மற்றும் கடும்...

13845820 trump 12
செய்திகள்உலகம்

வெளிநாட்டினர் அமெரிக்காவில் புலம் பெயர்வதற்கான தடை நீண்ட காலம் நீடிக்கும்: ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

வெள்ளை மாளிகைக்கு அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது ஆப்கானிஸ்தான் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்...