25 68453fa6a06df
உலகம்செய்திகள்

கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு

Share

கொலம்பிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், பழமைவாத கொலம்பிய செனட் உறுப்பினர்-மிகுவல் யூரிப் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்ற நம்பிக்கை மேலோங்கிய நிலையில், போகோட்டா நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பங்கேற்றிருந்தபோதே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உள்ளூர் ஊடக தகவல்களின்படி, அவர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்கள், தலையில் கடும் காயங்களுடன், 39 வயதான ஜனாதிபதி வேட்பாளர்; இரத்தம் தோய்ந்த நிலையில் இருப்பதை காட்டுகின்றன எனினும், செனட்டரின் நிலை குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.

செனட்டரின் எதிர்க்கட்சியான ஜனநாயக மையம், யூரிப் டர்பே மீதான தாக்குதலை கடுமையானது என்றும், ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறைச் செயல் என்றும் விபரித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ, “செனட்டர் மிகுவல் யூரிப் மீதான படுகொலை முயற்சியை கடுமையாக கண்டித்துள்ளார்

இது ஜனநாயகத்திற்கு நேரடி அச்சுறுத்தலாகும் என்று குறிப்பிட்டுள்ள அவர், கொலம்பிய அரசாங்கத்தின்; வன்முறை கலாசாரத்தையும் விமர்சித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...