2 2 scaled
உலகம்செய்திகள்

மனித இனத்திற்கே அச்சுறுத்தலாகும் ஆயுதம்: விற்பனை செய்த சீனா

Share

மனித இனத்திற்கே அச்சுறுத்தலாகும் ஆயுதம்: விற்பனை செய்த சீனா

தன்னிச்சையாக முடிவெடுக்கும் கொலைகார ரோபோக்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு சீனா விற்பனை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் இந்த கொலைகார ட்ரோன்களை உலகின் பல நாடுகள் மற்றும் ராணுவங்கள் வாங்கிக் குவிப்பதாக கூறப்படுகிறது. போர்க்களத்தில் இந்த ரோபோக்களை களமிறக்குவது, உண்மையில் கொடூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றே அஞ்சப்படுகிறது.

AI தொழில்நுட்பத்தில் செயல்படும் இந்த கொலைகார ரோபோக்கள் அல்லது ட்ரோன்களை மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியா முதல் பர்மா வரையிலும், ஈராக்கு முதல் எத்தியோப்பியா வரையிலும் சீனா ஏற்றுமதி செய்துள்ளது.

ஆனால் தற்போது சவுதி அரேபியா தொடர்பில் கடும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக சமீபத்தில் சீனாவின் இந்த கொலைகார ரோபோக்களை சவுதி முன்னெடுக்கும் கூட்டணி ஏமனில் களமிறக்க, இது கடந்த எட்டு ஆண்டுகளில் 8,000க்கும் மேற்பட்ட யேமன் குடிமக்களை கொன்றுள்ளது என தெரியவந்துள்ளது.

மேலும், ஐ.எஸ் தீவிரவாத குழுவினருக்கு எதிராக 260 ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்ததில், வெற்றி சதவீதம் 100 என்றே பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் இந்த கொலைகார ட்ரோன் தொடர்பில் 2019ல் அவுஸ்திரேலிய ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதாவது அந்த ட்ரோன் தாக்குதலில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள இயலாமல் போகும் எனவும், தாக்குதல் ஆரம்பித்தவுடன், போர்க்களத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் இறப்பதை அந்த ட்ரோன் உறுதி செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...