5 1 scaled
உலகம்செய்திகள்

சீன தாக்குதல் அச்சுறுத்தல்: எதிர் கொள்ள தயாராகும் மக்கள்

Share

வடகிழக்கு பசிபிக் கடலில் உள்ள தீவு நாடான தைவான், தன்னை சுயாட்சி பெற்ற தனி நாடாக அறிவித்து கொண்டாலும், அதை ஏற்க மறுக்கும் சீனா, அந்நாட்டை தனது முழு ஆளுகைக்கு உட்பட்ட நாடாக பிரகடனம் செய்து அதன் நிலப்பரப்பு மற்றும் வான்வெளி பகுதிகளில் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

ஆனால், தைவானின் சுயாட்சி உரிமைக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது.

சீனாவுடன் இது குறித்து அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன் நடந்த ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையின் போது, “தைவான் விஷயத்தில் சமரசமே இல்லை” என திட்டவட்டமாக சீனா தெரிவித்தது.

இதையடுத்து எப்போது வேண்டுமானாலும், சீனா தைவானை ஆக்ரமிக்கலாம் எனும் அச்சம் தைவான் நாட்டில் தோன்றியுள்ளது.

இதை தொடர்ந்து பல மக்கள் தங்கள் வெளியுலக தொடர்புகளை குறைத்து கொண்டுள்ளனர். அலுவலகம் செல்ல தயக்கம் காட்டி பலர், வீட்டிலிருந்தே பணிபுரிய தொடங்கி உள்ளனர். இணயவழி செயல்பாடுகள் குறைந்துள்ளதால், வங்கி சேவைகள் முடங்கி விட்டது.

ராணுவ தாக்குதல் மட்டுமின்றி இணைய வழியாகவும் சீனாவால் தாக்கப்படும் சாத்தியம் அதிகம் இருப்பதாக தைவான் அஞ்சுகிறது. இதனால் தைவானின் ராணுவ கட்டமைப்புகளில் மென்பொருள் பாதுகாப்பை அந்நாடு வலுப்படுத்தி கண்காணித்து வருகிறது.

தினந்தோறும் 5 மில்லியன் சைபர் தாக்குதல்கள் சீனாவினால் தைவான் நாட்டின் தொலைத்தொடர்பு, எரிசக்தி மற்றும் நிதித்துறை கட்டமைப்புகள் மீது நடத்தப்படுவதாக தைவான் அரசு தெரிவித்தது.

சீனாவிற்கு வெளியிலிருந்து இயங்கும் சீன சைபர் தாக்குதல் குழுவான “ஃப்ளாக்ஸ் டைஃபூன்” (Flax Typhoon) தைவான் நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்பை இணையவழியாக ஆக்ரமிக்க முயல்வதாக கடந்த வருடமே, மைக்ரோசாப்ட், எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 15
உலகம்செய்திகள்

டொனால்ட் டிரம்ப் வருகைக்கு முன்னதாக ஈரான் – சீனா அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இப்பிராந்தியத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஈரான்...

Untitled 14
செய்திகள்உலகம்

லண்டனில் யூத சமூகத்தினருக்காகப் பிரத்யேக பொலிஸ் பிரிவு: பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவு

லண்டனில் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைத்...

Untitled 13
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம்: காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தயாராகும் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைக் கைப்பற்றியுள்ள...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் வசிக்கும் மாலத்தீவினரின் விசா சிக்கல்கள்: நிரந்தரத் தீர்வு குறித்து ஜனாதிபதி முய்ஸு உறுதி

இலங்கைக்கு உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு, கொழும்பில் வசிக்கும்...