tamilni 270 scaled
உலகம்செய்திகள்

இலங்கை உட்பட மூன்று நாடுகளுக்குள் புகுந்துள்ள சீன இராணுவம்

Share

இலங்கை உட்பட மூன்று நாடுகளுக்குள் புகுந்துள்ள சீன இராணுவம்

பாதுகாப்பு விவகாரங்களில் மேலும் ஒத்துழைப்பது குறித்து ஆலோசிக்க சீன இராணுவக் குழு ஒன்று அண்மையில் மாலைதீவு, இலங்கை மற்றும் நேபாளத்துக்குச் சென்றுள்ளதாக பீய்ஜிங் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பீய்ஜிங் தெற்காசியாவில் அதன் மூலோபாய போட்டியாளரான இந்தியாவின் செல்வாக்கை எதிர்கொள்வதற்கான உந்துதலில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்க முயன்று வருகிறது.

கடந்த வாரம், மாலைதீவுகள் சீனாவுடன் ஒரு “இராணுவ உதவி” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அதேவேளை, மார்ச் 4 முதல் 13 ஆகிய திகதிகள் வரை இலங்கை சீனா மற்றும் நேபாளத்துக்கு மேற்கொள்ளப்பட்ட பயணத்தின்போது இராணுவத் தூதுக்குழு மாலைதீவில் சீன சார்பு அதிபர் மொஹமட் முய்சுவை சந்தித்ததை பீய்ஜிங் நேற்றையதினம் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், குறித்த மூன்று நாடுகளிலும், “இராணுவ உறவுகள் மற்றும் பொதுவான அக்கறையின் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களை சீனக்குழுவினர் பரிமாறிக் கொண்டனர்” என்று சீன இராணுவம் அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பீய்ஜிங் நேபாளத்துடனும் நெருங்கிய உறவுகளை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
wor
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் ஏர் அம்புலன்ஸ் விமானம் விழுந்து விபத்து! – காட்டில் நொருங்கிய விண்கலம்; ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் அம்புலன்ஸ் (Air...

vijai
செய்திகள்இந்தியா

ஸ்டாலின் vs விஜய்: சட்டமன்றத் தேர்தல் ஒரு ‘நேரடிப் போர்’ என அதிரடி முழக்கம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்,...

image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...