பெரும் போர் மூளும் அபாயம்: தைவானை திடீரென சுற்றி வளைத்த சீன ராணுவம்!
தைவானின் சுயராஜ்யத் தீவைச் சுற்றியுள்ள நீர் மற்றும் வான்வெளியில் இரண்டு நாள் ராணுவப் பயிற்சியை சீனா தொடங்கியுள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
தைவான் ஜலசந்தி, தைவானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சீன ராணுவம் தீவிர பயிற்சில் ஈடுபட்டு வருவதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது.
தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிற நிலையில் தைவான் அரசாங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவாகரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கிறது. இந்நிலையில் தைவானை மிரட்டும் வகையில் அந்நாட்டை சுற்றி தீவிர போர் பயிற்சியில் சீன ஈடுபட்டு வருகிறது.
தைவானின் புதிய ஜனாதிபதி பதவியேற்றிய நிலையில் சீன இவ்வாறான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.
மேற்கில் உள்ள தைவான் ஜலசந்தி உள்பட தீவைச் சுற்றியும், தைவான் கட்டுப்பாட்டில் உள்ள கின்மென், மாட்சு, வுகியு, டோங்கியின் தீவுகளைச் சுற்றியும் போர் பயிற்சி நடைபெற்று வருகின்றது.
இது குறித்து சீன ராணுவ செய்தியாளர் கூறுகையில், “இந்த போர் பயிற்சிகள் பிரிவினைவாத செயல்களுக்கு வலுவான தண்டனையாக இருக்கும். கூட்டு கடல்-வான் போர் தயார்நிலை ரோந்து, முக்கிய இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்கள், படைகளின் கூட்டு உண்மையான போர் திறன்களை சோதிக்க தீவிற்கு உள்ளேயும் வெளியேயும் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. தைவான் படைகளின் பிரிவினைவாதச் செயல்களுக்கு இது ஒரு வலுவான தண்டனை மற்றும் வெளி சக்திகளின் தலையீடு, ஆத்திரமூட்டலுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கையாகும்” என கூறியுள்ளார்.
சீனாவின் குறிப்பிட்ட இந்த நடவடிக்கையை தைவான் கண்டித்துள்ளது.
இது குறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கையில், “சீனாவின் நடவடிக்கைகள் பகுத்தறிவற்ற ஆத்திரமூட்டல்கள் ஆகும். தைவானின் இறையாண்மையைப் பாதுகாக்க கடற்படை, வான் மற்றும் தரைப்படைகள் அனுப்பப்பட்டுள்ளது” என கூறப்படுகிறது.
- abc news
- breaking news
- daily mail news
- daily news
- domestic news
- english news
- fox news
- global news
- India news
- international news
- latest news
- live news
- nbc news
- nbc news now
- News
- news abc
- news english
- streaming abc news
- streaming news
- Taiwan
- uk news live
- us news
- wion live news
- wion news live
- World
- world news
- world news live
- world news tonight