சீனா – அமெரிக்காவுக்கு இடையில் அதி உயரிய ஒப்பந்தம்.. உலக பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

4 15

அமெரிக்கா (US) மற்றும் சீனாவுக்கு (China) இடையில் அதி உயரிய பொருளாதார ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவுடனான உயர்மட்ட வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்க உயர் அதிகாரிகள், குறித்த பேச்சுவார்த்தையில் கணிசமான முன்னேற்றம் உள்ளது என கூறி இரண்டுநாட்கள் – பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளிவந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் போசன்ட், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வரி பேச்சுவார்த்தயைில் ஒரு கணிசமான முன்னேற்றம் எட்டப்பட்டமை குறித்து மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அமெரிக்காவின் வரி நிர்வாக பிரதிநிதி ஜேமிசன் கிரேர், கடந்த மாதம் டொனால்ட் ட்ரம்ப் சீனா மீது விதித்த 145 வீத வரியை தொடர்ந்து தற்போது ஒரு முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், “ஜனாதிபதி ஒரு தேசிய அவசரநிலையை அறிவித்து வரிகளை விதித்தார், மேலும் எங்கள் சீன கூட்டாளிகளுடன் நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் அந்த தேசிய அவசரநிலையைத் தீர்ப்பதற்கான பணிகளைத் தீர்க்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கிரேர் கூறியுள்ளார்.

மேலும், “எவ்வளவு விரைவாக நாங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வர முடிந்தது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம், இது ஒருவேளை நினைத்த அளவுக்கு வேறுபாடுகள் பெரிதாக இல்லை என்பதைப் பிரதிபலிக்கிறது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உலகின் இரு பொருளாதார வல்லரசு நாடுகளுக்கு இடையில் எட்டப்பட்டுள்ள இந்த தீர்மானம் உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version