உலகம்செய்திகள்

தைவானைச் சுற்றி 24 மணிநேரத்தில் 32 போர் விமானங்கள்! சீனா மீது பரபரப்பு குற்றச்சாட்டு

Share
24 65fc82e750c05
Share

தைவானைச் சுற்றி 24 மணிநேரத்தில் 32 போர் விமானங்கள்! சீனா மீது பரபரப்பு குற்றச்சாட்டு

24 மணிநேரத்தில் 32 சீனப் போர் விமானங்கள் தங்கள் நாட்டின் மீது கண்டறிந்ததாக தைவான் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

சீனா தங்கள் பிரதேசத்தின் ஒரு பகுதி என்று உரிமை கோருவதால், தைவானுக்கு இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் தைவானைச் சுற்றி சீனாவின் 11 கடற்படைக் கப்பல்கள் கண்டறியப்பட்டதாக தைவான் கூறியது.

அதேபோல் சந்திர புத்தாண்டு விடுமுறையின்போது தொடர்ச்சியாக 2 நாட்களில் 8 சீன பலூன்களை தைவான் கண்டறிந்தது.

இந்த நிலையில் தைவானைச் சுற்றி 5 கடற்படைக் கப்பல்கள் இயங்குவதை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

அத்துடன் 24 மணிநேரத்தில் 32 சீன இராணுவ விமானங்கள் தீவைச் சுற்றி கண்டறியப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சனவரி பிற்பகுதியிலும், பிப்ரவரி தொடக்கத்திலும் இரண்டு 24 மணி நேர காலப்பகுதிகளில் தீவைச் சுற்றி 33 சீனப் போர் விமானங்களைக் கண்டறிந்தது, இந்த ஆண்டின் மிக அதிகமான எண்ணிக்கையாகும்.

சீனா சமீபத்திய ஆண்டுகளில் இராணுவ அழுத்தத்தை அதிகரித்துள்ளது. மேலும், தீவைச் சுற்றி போர் விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...