சுவிட்சர்லாந்தில் வாழும் ஒரு கூட்டம் மக்களை உளவு பார்க்கும் நாடு
சுவிட்சர்லாந்தில் வாழும் சிறுபான்மையினரை சீனா உளவு பார்ப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வாழும் திபெத் நாட்டவர்கள் மற்றும் உய்குர் இன மக்களை சீனா உளவு பார்ப்பதாக, பேசல் பல்கலை பெடரல் நீதி அலுவலகத்துக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.
இந்த இரண்டு குழுக்களைச் சேர்ந்த மக்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், அவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
அத்துடன், அந்த நபர்களுடன் தொடர்புடைய சுவிஸ் நாட்டவர்களும் கண்காணிக்கப்படுகிறார்களாம்.
ஆகவே, சிறுபான்மையினரைக் குறிவைத்து நடத்தப்படும் இதுபோன்ற நாடுகடந்த அடக்குமுறையிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்காக, கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள உறுதியேற்றுள்ளதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.