8 36
உலகம்

இலங்கை தொடர்பில் சீனா வெளியிட்ட அறிவிப்பு

Share

இலங்கை தொடர்பில் சீனா வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையின்(sri lanka) நிலையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில், நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாத கொள்கைகளை கடைப்பிடித்து, அதன் இறையாண்மைக்கு மதிப்பளித்து, ஆக்கபூர்வமான பங்கை ஆற்றுவதற்கு தயாராக இருப்பதாக சீனா (china)தெரிவித்துள்ளது.

அண்மைய ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான்(Lin Jian ), செப்டெம்பர் 21ஆம் திகதி தேர்தல் சுமுகமாக நடைபெற்றதாகவும், இலங்கையின் நட்பு அண்டை நாடான சீனாவும், இலங்கையும் எல்லா நேரங்களிலும் பரஸ்பர மரியாதை மற்றும் ஆதரவுடன் நடந்துகொண்டதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிப் பிரமாணம் செய்து கொண்ட திஸாநாயக்காவுக்கு சீனா மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது. ஜனாதிபதி ஷி ஜின்பிங்(Xi Jinping ), ஜனாதிபதி திஸாநாயக்கவுக்கு(anurarakumara dissanayake) வாழ்த்துச் செய்தியை அனுப்பினார்,” என்று அவர் கூறினார்.

கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இலங்கையின் உறுதிப்பாட்டில் சீனாவின் நம்பிக்கை பற்றிக் கேட்டபோது, சீனாவும் இலங்கையும் நீண்டகால நட்புறவைப் பகிர்ந்துகொள்வதாக லின் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி திஸாநாயக்க மற்றும் அவரது புதிய நிர்வாகத்துடன் இணைந்து ஐந்து கொள்கைகளின் அடிப்படையில் பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்.”சமாதான சகவாழ்வின் உணர்வை நிலைநிறுத்துவதற்கும், இரு நாடுகளுக்கிடையிலான பாரம்பரிய நட்பை முன்னெடுத்துச் செல்வதற்கும், எமது அபிவிருத்தி உத்திகளுக்கு இடையில் அதிக ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கும், உயர்தர பட்டுப்பாதை திட்டத்தை ஆழப்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு, மற்றும் நேர்மையான பரஸ்பர உதவி மற்றும் நிரந்தர நட்பு அடிப்படையில் எங்கள் மூலோபாய கூட்டாண்மையில் புதிய முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்,” என்று அவர் கூறினார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 210
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம்? டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 10 நாள்...