தலிபான் அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சீனா, சஆப்கானின் புதிய அரசுக்கு 3.10 கோடி டொலர் மதிப்பிலான உதவி வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு தற்போது புதிய இடைக்கால அரசு தாலிபான்களால் அமைக்கப்பட்டுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யின் தெரிவிக்கையில்,
ஆப்கான் மக்களுக்கு உதவ வேண்டும், அவர்களின் வளர்ச்சிக்கு துணையாக இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானின் இறையாண்மை,மற்றும் சுதந்திரத்தை மதிக்க வேண்டும், இதுவே எங்கள் நோக்கம்
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவும் வகையில் 3.10 கோடி அமெரிக்க டொலர் மதிப்பிலான நிதி உதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆப்கான் மக்களுக்கு உணவு, குளிர்காலத்தை சமாளிக்கும் பொருள்கள், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் போன்றவை தலிபான் அரசிடம் வழங்கப்படவுள்ளன. இதேவேளை, ஆப்கானிஸ்தானுக்கு முதல்கட்டமாக 30 லட்சம் தடுப்பூசிகளை சீனா வழங்கும் – எனத் தெரிவித்துள்ளார்.