சீனாவின் வெளிவிவகார அமைச்சர் மாயம்
சீன வெளியுறவு அமைச்சர் குய்ன் காங் திடீரென காணாமல் போன சம்பவம் அந்நாட்டிலும், உலக அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன ஜனாதிபதியாக செயற்படும் ஜிஜிங்பிங் இன் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக குய்ன் காங் செயற்பட்டு வருகிறார்.
இவர் கடந்த மாதம் 24 ஆம் திகதி முதல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலும், செய்தியாளர்களை சந்திக்காமலும், ஜனாதிபதியின் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்காமலும் இருந்துள்ளார்.
இதனையடுத்து அவர் திடீரென காணாமல்போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்ஜிங்கில் இராஜதந்திர உயர்மட்ட சந்திப்புகள் நடைபெற்றிருந்தன. இருப்பினும், சீனாவின் வெளியுறவு அமைச்சர் குய்ன் காங் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக பொதுமக்களின் பார்வைக்கு வரவில்லை என கூறப்படுகின்றது.
மேலும், நீண்ட காலமாக பொது வெளியில் வராதது அவர் இருக்கும் இடத்தைப் பற்றிய சந்தேகங்களை உலகிற்கு தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில் ஜூன் 25 ஆம் திகதி ரஷ்யா, வியட்நாம் மற்றும் இலங்கை நாடுகளை சேர்ந்த சகாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் இருந்து பொது வெளியில் வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மாஸ்கோவிற்கு எதிரான வாக்னர் கூலிப்படைக் குழுவின் கைவிடப்பட்ட கிளர்ச்சிக்கு 48 மணி நேரத்திற்குள் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்த ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ உடனான சந்திப்பின்போதே அரச ஊடகத்தில் கின் இறுதியாக தோன்றியுள்ளார்.
அத்துடன் ஜூலை 4 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் மற்றும் கின் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்றை திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் சில நாட்களின் எவ்வித விளக்கமும் இல்லாமல் சீனா பேச்சுவார்த்தையை ரத்து செய்ததாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
- abc news
- bbc news
- breaking news
- cbn news
- China Govt Is Search For Missing Foreign Minister
- christian news
- christian world news
- dw news
- english news
- faith news
- international news
- latest news
- live news
- my world
- nbc news
- News
- news 24 sports
- news live
- news18 india
- sky news
- the world ahead
- today news
- top news
- tvp world
- us news
- war news
- wion news today
- women's world cup
- World
- world 2023
- world affairs
- world ahead
- World Cup.
- world news
- world news live
- world war 3
- world war live
1 Comment