முதல்முறையாக வானத்தை பார்த்த சிம்பன்சி
உலகம்செய்திகள்

28 ஆண்டுகள் பிறகு முதல்முறையாக வானத்தை பார்த்த சிம்பன்சி

Share

முதல்முறையாக வானத்தை பார்த்த சிம்பன்சி!

28 ஆண்டுகள் பிறகு முதல்முறையாக வானத்தை பார்த்த சிம்பான்சி துள்ளி குதித்து மகிழ்ந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நியூயார்க்கை தளமாக கொண்ட கலிபோர்னியா சரணாலய ஆய்வாகத்தில் வெனிலா என்ற சிம்பன்சி சுமார் 28 ஆண்டுகளாக கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கலிபோர்னியா சரணாலயத்தில் அடைக்கப்பட்டிருந்த வெனிலா தற்போது புளோரிடா சரணாலயத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது, முதல்முறையாக வெளி உலகை பார்த்தது வெனிலா. முதலில் வெளியே வர தயக்கம் காட்டிய வெனிலா சிம்பன்சி, வெளியே வந்து ஆச்சரியமாக அங்கும், இங்கும் வியப்பாக வானத்தை பார்த்தது.

இதன் பின்னர் வெளியே வந்த வெனிலா மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆரவாரம் செய்தது. மற்ற சிம்பன்சி குரங்குகளை வெனிலா கட்டித் தழுவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

இது குறித்து மீட்புப் பணியாளர்கள் கூறுகையில், 28 வயதான வெண்ணிலா என்ற சிம்பன்சி புளோரிடாவில் உள்ள சரணாலயத்தில் முதன்முறையாக திறந்த வானத்தைப் பார்த்தபோது “பிரமிப்பில்” ஆழ்ந்தது என்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நெஞ்சம் மகிழ்ச்சியில் நனைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று...