3 2 scaled
உலகம்செய்திகள்

ஆணழகன் போட்டிக்கு தயாரான ஜிம் பயிற்சியாளர் மயங்கி விழுந்து மரணம்!

Share

ஆணழகன் போட்டிக்கு தயாரான ஜிம் பயிற்சியாளர் மயங்கி விழுந்து மரணம்!

சென்னையில் ஆணழகன் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவர், குளியறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொரட்டூர் பகுதியில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தவர் யோகேஷ்.

41 வயதான இவர் ஆணழகன் போட்டிக்காக தயாராகி வந்துள்ளார். இந்த உடற்பயிற்சி செய்தபோது யோகேஷ் சோர்வடைந்துள்ளார்.

இதனால் அவர் குளிக்க சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் ஜிம்மில் இருந்தவர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.

அதன் பின்னர் குளியறை கதவை திறந்து பார்த்தபோது யோகேஷ் மயங்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு யோகேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஜிம் பயிற்சியாளர் உடற்பயிற்சிக்கு பின் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...