வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்திய விண்கலம் சந்திரயான்-3
இந்தியாவில் சந்திரயான்-3 எனும் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டமை வரலாற்றின் முக்கிய நிகழ்வாக பதிவாகியுள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து 14.07.2023 சரியாக பிற்பகல் 2.35 மணிக்கு இந்த விண்கலம் ஏவப்பட்டது.
தற்போது பூமியிலிருந்து வெற்றிகரமாகப் பயணித்து 179 கி.மீ. தொலைவில், நீள் வட்டப்பாதையில் சந்திரயான் – 3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷியா, சீனாவை தொடா்ந்து இந்தியா மூன்றாவது முறையாக நிலவை ஆய்வு செய்ய முன்னெடுத்துள்ள இந்த முயற்சி, உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈா்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியை இஸ்ரோ தளத்தில் முன்பதிவு செய்து நேரடியாக பார்வையிட்டுள்ளனர்.
சந்திரயான்-3 திட்டம் சுமார் இந்திய மதிப்பின்படி 615 கோடி ரூபாயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக மொத்தம் 3,895 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் -3 வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் ஆகஸ்ட் மாத இறுதியில் நிலவில் தரையிரங்கும் எனவும் மொத்தமாக 14 நாட்கள் நிலவின் தன்மையையும், சூழலையும் ஆய்வு செய்ய உள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த விண்கலத்தில் மொத்தம் 7 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நிலவுக்கு சென்றவுடன் தனித்தனியாக ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment