2021 – பிரபலங்களின் பட்டியல் வெளியீடு!
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல TIME இதழ் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் செல்வாக்கு மிகுந்த 100 தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான, உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பிரபலங்கள் பட்டியலை கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஷி ஜின்பிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சீன அதிபர் ஷி ஜின் பிங், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இவர்களுடன் தலிபான் மூத்த தலைவரும், ஆப்கானிஸ்தானின் துணை பிரதமருமான அப்துல் கனி பராதர் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு தலைவர்களைப் பற்றிய குறிப்புக்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றமை இதன் சிறப்பம்சமாகும்.
Leave a comment