MediaFile 1
உலகம்செய்திகள்

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் உடன் அமுலுக்கு!

Share

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாரின் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரே குறித்த இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகக் கட்டார் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இரு அண்டை நாடுகளுக்கும் இடையேயான மோதல் இடம்பெற்று வந்த நிலையில், கடந்த வாரத்தில் அது மேலும் மோசமடைந்தது. இந்த புதிய மோதலில் பல உயிரழப்புகள் ஏற்பட்டதோடு, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், கட்டார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்துடன் சனிக்கிழமை நடைபெற்ற ஒரு சுற்று பேச்சுவார்த்தைகளின் போது இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாகக் கட்டார் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

“போர்நிறுத்தத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், அதன் செயல்படுத்தலை நம்பகமான மற்றும் நிலையான முறையில் சரிபார்க்கவும்” இரு தரப்பினரும் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்த உறுதிபூண்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...