உலகம்செய்திகள்

ஒரு நகரம் மொத்தம் துர்வாடையால் முகம் சுளிக்க வைத்த கப்பல்

tamilni 489 scaled
Share

தென்னாப்பிரிக்க தலைநகரில் மக்களை மொத்தமாக முகம் சுளிக்க வைத்த கப்பலானது இறுதியில் ஈராக் நோக்கி புறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் இருந்து 19,000 பசு மாடுகளுடன் புறப்பட்ட Al Kuwait என்ற கப்பலானது ஞாயிறன்று கேப் டவுன் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. அந்த கப்பலில் பசு மாடுகளுக்கான தீவனங்களை ஏற்றும் வகையிலேயே கேப் டவுன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

ஆனால் சில மணி நேரத்திலேயே அந்த கப்பலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார் அளிக்கத் தொடங்கினர். இதனையடுத்து NSPCA அமைப்பானது தொடர்புடைய கப்பலை ஆய்வுக்கு உட்படுத்தியது.

இதில் மலம் மற்றும் சிறுநீரின் தீவிர பாதிப்பு உட்பட, வெறுக்கத்தக்க நிலைமையில் கப்பல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. மேலும், அந்த கப்பலில் பசு மாடுகள் ஏற்றப்பட்டு 2 வாரங்களுக்கு மேலானதாகவும், வேறு வழியின்றி, அதன் கழிவுகளின் மீதே ஓய்வெடுக்கும் நிலைக்கு அவைகள் தள்ளப்பட்டுள்ளதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது

மேலும் காயங்கள் காரணமாக 8 மாடுகள் கொல்லப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி, சில மாடுகள் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த கப்பல் ஈராக் நோக்கி புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
Related Articles
5 11
உலகம்செய்திகள்

இந்தியாவில் 8000 எக்ஸ் தள கணக்குகள் முடக்கம்

இந்தியாவில் (India) 8000 எக்ஸ் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள்...

4 11
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு இணையான தனியாரின் சம்பள அதிகரிப்பு: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

அரச ஊழியர்களின் சமீபத்திய சம்பள திருத்தத்திற்கு இணையாக தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச மாதாந்திர...

3 11
உலகம்செய்திகள்

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டிகள்

பாகிஸ்தானின் 20க்கு 20 கிரிக்கெட் லீக் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்படும் என்று பாகிஸ்தானிய கிரிக்கெட்...

1 10
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதில் கட்சிக்குள் பல...