download 27 1 1
உலகம்செய்திகள்

டால்க் பவுடரால் புற்றுநோய்!

Share

அமெரிக்காவைச் சேர்ந்த Johnson & Johnson என்ற மருந்தாக்க நிறுவனம் அனைவராலும் பயன்படுத்தப்படும் பவுடர் மற்றும் கிறீம் போன்ற பொருட்களை  தயாரித்து வருகின்றது.

இந்நிலையில்,  Asbestos என்னும் தாதுப்பொருட்கள் உள்ளடங்கிய  அந்த பவுடர் வகைகளால் புற்றுநோய் ஏற்பட்டதாக அதன் பயனாளர்கள் வழக்கு பதிவு செய்திருந்துள்ளனர்.

நிறுவனத்தின் பேபி பவுடர் மற்றும் பிற டால்க் பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கியது என்ற குற்றச்சாட்டை தீர்க்க அடுத்த 25 ஆண்டுகளில்  8.9 பில்லியன் டொலரினை வழங்க  Johnson & Johnson மருந்தாக்க நிறுவனம் முன்வந்துள்ளது.

நீண்ட ஆண்டுகளாக நடந்து வரும் அந்த வழக்குகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அந்தத் தொகையை நிறுவனம் முன்மொழிந்துள்ளது.ஆயினும் அதற்கு நொடிப்பு நீதிமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.Asbestos தாதுப்பொருள் கலக்கப்பட்ட Johnson & Johnson டால்க் பவுடரைப் பயன்படுத்தியவர்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்படும்  பல்லாயிர கணக்கான வழக்குகளை நிறுவனம் எதிர்நோக்கி வந்துள்ளது.

ஆனால் அவற்றுக்குப் போதிய அறிவியல் ஆதாரம் இல்லை என்று நிறுவன வழக்காடலின் துணைத் தலைவர் எரிக் ஹாஸ் குறிப்பிட்டுள்ளதுடன், குறித்த நிறுவனம் எந்தத் தவறினையும்  ஒப்புக் கொள்ளவில்லை.

இருப்பினும்,  குழந்தைகளுக்கான டால்க் பவுடரின் விற்பனையை 2020 ஆம் ஆண்டு மே மாதமளவில்  அமெரிக்கா மற்றும்  கனடா போன்ற நாடுகள் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...