18
உலகம்செய்திகள்

கார்னியின் வெற்றி! அமெரிக்காவுடன் முதல் ஒப்பந்தத்திற்கு தாயாராகும் கனடா

Share

கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும், அடுத்த வாரத்திற்குள் வெள்ளை மாளிகைக்கு வருகை தருவார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று கனேடியத் பிரதமர் கார்னியை தொலைபேசியில் அழைத்தபோது, ​​தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாக டிரம்ப் கூறியுள்ளார்.

“நேற்று கார்னி எனக்கு தொலைபேசி அழைப்பு செய்தார் – ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று கூறினார்,” என்று ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும், கனேடிய தலைவர் ஒரு வாரத்திற்குள் வெள்ளை மாளிகைக்கு வருவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா நாடாளுமன்ற தேர்தலில், மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, நான்காவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

இதில் லிபரல் கட்சி 144 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. மேலும், கென்சவேர்ட்டிவ் கட்சி 121 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

லிபரல் கட்சிக்கு 43 வீத வாக்குகளும் கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு 41 .7 வீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...