3 11 scaled
உலகம்செய்திகள்

வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கல்! கனடாவின் திட்டம்

Share

வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கல்! கனடாவின் திட்டம்

கனடாவில் வீடுகள் தட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கு சர்வதேச மாணவர்கள் ஒரு முக்கிய காரணம் என்னும் கருத்து கனடாவில் அதிகரித்துவருகிறது.

வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கலை உருவாக்க இருக்கும் கனடாவின் திட்டம்
கனடாவில் சுமார் 800,000 சர்வதேச மாணவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஆக, அவர்களால் வீடு தட்டுப்பாடு நிலவுவதாக ஒரு கருத்து நிலவுகிறது.

ஆகவே, சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுவருகிறது கனடா அரசு.

அதாவது, மாணவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கும் நோக்கம் இல்லாமல், தங்கள் லாபத்துக்காக ஏராளமான மாணவர்களை கனடாவுக்கு ஈர்க்கும் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முன்னாள் புலம்பெயர்தல் அமைச்சரும், இந்நாள் உள்கட்டமைப்புத்துறை அமைச்சருமான Sean Fraser திட்டமிட்டுவருகிறார்.

சமீபத்திய தேர்தலில், ஆளும் ட்ரூடோவின் கட்சி பின்தங்கியதற்கு வீடுகள் பற்றாக்குறை பிரச்சினை ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆகவே, அதை சமாளிக்க அரசு திட்டமிட்டுவரும் நிலையில், கடந்த மாதம் வரை புலம்பெயர்தல் அமைச்சராக இருந்த Sean Fraser தற்போது உள்கட்டமைப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வீடுகள் பற்றாக்குறையை எதிர்கொள்ள திட்டமிட்டுவருகிறார் அவர். அதற்கு அவர் எடுத்துள்ள ஆயுதம், சர்வதேச மாணவர்களைக் கட்டுப்படுத்துவது.

ஆக, வரும் நாட்களில் சர்வதேச மாணவர்கள் கனடா வருவதற்கு சிக்கல்கள் அல்லது குறைந்தபட்சம் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...