கனடாவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுத் தேர்தல் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
இரண்டு முறை பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இம்முறை பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்புகளில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் ஜஸிடின் ட்ரூடோவும் கன்சவேர்ட்டிவ் கட்சி சார்பில் எரின் ஓ டூல்லும் களமிறங்குகின்றனர்.
சர்வதேச அளவில் பிரபலமான தலைவர்களில் ஒருவராக அறியப்படும் ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு தற்சமயம் வீழ்ச்சியடைந்துள்ளது.
2019ஆம் அங்கு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியால் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமல் போனது.
இதனால் 2 ஆண்டுகளிலேயே மற்றுமொரு தேர்தலை கனடா சந்திக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment