2 19 scaled
உலகம்செய்திகள்

பிரச்சினைகளில் சிக்கிய இந்தியா!! கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

Share

பிரச்சினைகளில் சிக்கிய இந்தியா!! கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமானால், அது பெரிய பிரச்சினைதான் என்று கூறியுள்ளார் கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர்.

கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

அதைத்தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரி ஒருவரை, நாட்டை விட்டு வெளியேறும்படி கனடா உத்தரவிட்டது. இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியதற்கு பதிலடியாக, கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்றியது இந்தியா. அடுத்ததாக, கனேடியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது இந்தியா.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், கனடா பாதுகாப்பு அமைச்சர் Bill Blair சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், இந்தியாவுடனான எங்கள் உறவு இப்போது ஒரு சவாலாக இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதே நேரத்தில், சட்டத்தைப் பாதுகாத்து எங்கள் குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களிடம் இருக்கிறது.

ஒரு முழுமையான விசாரணையை நடத்தி உண்மையைப் பெறுவதற்கான பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இப்போது விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் உண்மையை நாங்கள் நிச்சயம் கண்டறிவோம்.

குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் அது பெரிய பிரச்னை தான். ஏனென்றால் கனடா மண்ணில் கனடா குடிமகன் ஒருவரைக் கொல்வது என்பது எங்கள் இறையாண்மையை மீறும் செயலாகும் என்று கூறியுள்ளார்.

இப்படி இரு நாடுகளுக்குமிடையில் உரசல் ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்களில் ஒன்று, இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமானால், அது பெரிய பிரச்சினைதான் என்பதாக இருந்தாலும், இன்னொரு பக்கம், இந்தியாவுடனான உறவு தங்களுக்கு முக்கியமானது என அவர் சொல்லாமல் சொல்லியுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...